மாலையில் அண்ணாமலையை சந்திக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு..!
ஈரோடு இடைத்தேர்தலை முன்னிட்டு மாலையில் அண்ணாமலையை சந்திக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு
வரும் பிப்.27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பணிகளில் மிகவும் தீவிரமாக அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று மாலை ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு தனித்தனியாக மாநில பாஜக அண்ணாமலை அவர்களை சந்தித்து பேச உள்ளனர்.
அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு, இன்று காலை 11 மணிக்கு வாசன் அவர்களை சந்தித்து பேச உள்ளனர். மேலும், பாமக ராமதாஸ், தமமுக ஜான்பாண்டியன், புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தி ஆகியோரை ஓபிஎஸ் தரப்பு சந்திக்க உள்ளது.