பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழப்புக்கு ஓபிஎஸ் – ஈபிஎஸ் இரங்கல்

Published by
murugan

பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழப்புக்கு ஓ.பன்னீர் செல்வம்,  எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.

பிபின் ராவத்தின் மறைவால் நாடு முழுவதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் ராணுவத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பிபின் ராவத்தின் மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,  இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களும், அவருடைய மனைவியும், மேலும் சில ராணுவ உயர் அதிகாரிகளும், நீலகிரி மாவட்டம், குன்னூர், வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் நடைபெற இருந்த, தேசிய அளவிலான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, ராணுவ உயர் அதிகாரிகளுடன் சென்றபோது, அவர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளாகி, அவர்களில் ஹெலிகாப்டர் பைலட் ஒருவரைத் தவிர, மற்ற 13 பேர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தோம்.

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவர்கள் அஞ்சா நெஞ்சமும், அளவில்லா வீரமும் கொண்ட தேச பக்தர் என்று அனைவராலும் போற்றப்படுபவர். அவருடன் பயணித்த நம் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தேசத்தின் பாதுகாப்பிற்காக தங்களை அர்ப்பணித்துப் பணியாற்றிய வீரர் பெருமக்கள் அவர்களுடைய மரணம் தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

விபத்தில் உயிரிழந்திருக்கும் தளபதி பிபின் ராவத், அவர் தம் மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். உயிரிழந்தோர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Recent Posts

நேரு குறித்து அவதூறு பேச்சு: ‘இது போல் மீண்டும் நடக்காது’… மன்னிப்புக் கேட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன்!

நேரு குறித்து அவதூறு பேச்சு: ‘இது போல் மீண்டும் நடக்காது’… மன்னிப்புக் கேட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன்!

சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி  என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…

8 hours ago

சென்னையில் களைகட்டும் புத்தாண்டு கொண்டாட்டம்… மெரினா கடற்கரை மூடல்!

சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…

9 hours ago

எஃப்.ஐ.ஆர் வெளியானது எப்படி? வருண்குமார் பெரிய அப்பாடக்கரா? – சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…

9 hours ago

மணிப்பூர் வன்முறை சம்பவம்… பகிரங்க மன்னிப்பு கேட்ட முதல்வர் பிரேன் சிங்.!

மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…

10 hours ago

நேரு பற்றி அவதூறு பேச்சு: “அவரை கைது செய்ய வேண்டும்” செல்வப்பெருந்தகை கோரிக்கை!

சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…

11 hours ago

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு.!

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…

11 hours ago