இன்று ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை செலுத்துகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதனை முன்னிட்டு ஜெயலலிதாவின் 5-வது ஆண்டு நினைவு நாளை கடைபிடிக்க சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அதிமுக தரப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் உள்ளிட்டோர் இன்று காலை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளனர். அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அதிமுகவின் மூத்த தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், உள்ளிட்ட பலர்கலந்துகொள்ள உள்ளனர்.