ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு இபிஎஸ், ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை..!

EPS, OPS

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  6 முறை பதவி வகித்தவர். கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த அவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின்  76 வது பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை கிரீன்வேஸ் சாலை உள்ள தனது இல்லத்தில் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

READ MORE- மீண்டும் தமிழகம் வரும் பிரதமர்.. பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்! 2 நாள் பயணத்தில் முக்கிய நிகழ்வுகள்!

தனது சமூக வலைத்தள எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் காவல் தெய்வம், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் வழிவந்த அரசியல் ஞானி, தமிழக மக்களின் பாசத்திற்குரிய அன்பு அம்மா அவர்களின் 76-ஆவது பிறந்த நாள் இன்று , ஆட்சியிலும் சரி, அரசியலிலும் சரி, எந்தவிதத்திலும் சமரசம் இல்லாமல், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல், சமநிலையோடு, சமதர்மத்தோடு, சமூக நீதியோடு அரசாண்ட சிங்க நிகர்த் தலைவி நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். தன்னுடைய வாழ்வு இந்த மக்களுக்கான தவ வாழ்வு.

எப்போதும் மக்களிடத்திலே அதை நிரூபிக்கின்ற விதமாக “உங்களால் நான், உங்களுக்காகவே நான்” என்று தொடர்ந்து மக்கள் முன் சூளுரை ஏற்று, அதன்படி மக்கள் பணியாற்றிய ஒப்பற்ற தலைவி நம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ” என பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்