OPS , EPS வருகையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்..!!

Default Image

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில், போலீசார் மற்றும் மாணவ, மாணவிகள் நடுவே பெரும் மோதல் வெடித்தது.

சென்னை:
சென்னை பல்கலைக்கழகம் துவங்கி 160 வருடங்கள் ஆகிவிட்டன. இதையொட்டி அங்கு ஆண்டு விழா நடைபெறுகிறது.இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். பகல் 12 மணிக்கு விழா துவங்கவிருந்த நிலையில், 11.30 மணியளவில் அதாவது, முதல்வர் பல்கலைக்கழகத்திற்கு வருவதற்கு சற்று நேரம் முன்பாக பல்கலைக்கழகத்தில் செயல்படும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் அமைப்பில் உள்ள மாணவ மாணவிகள் திடீரென பல்கலைக்கழக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.மாணவ-மாணவிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாத நிலையில் இந்த விழா தேவையா என்று அவர்கள் கோஷமிட்டனர்.

Image result for சென்னை பல்கலைக்கழகம்

இளவரசி என்ற மாணவி கூறுகையில், துணைவேந்தர், பேராசிரியர்களுக்கு மினரல் வாட்டர் தருகிறார்கள். மாணவர்களை வீட்டில் இருந்து தண்ணீர் எடுத்துவர சொல்கிறார்கள். எனவே, மாணவர்களுக்கு குடிநீர் பாட்டில் தரும் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம் என்றார்.
இதையடுத்து மாணவ மாணவிகளை குண்டுகட்டாக போலீசார் அங்கிருந்து அகற்றி காவல்துறை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். அப்போது மாணவ மாணவிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பல்கலை. வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் பல்கலைக்கழக வாயிலில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi