OPS-EPS மாற்றங்களை உருவாக்குகிறார்கள்..!!
ஒபிஎஸ் – ஈபிஎஸ் இணைந்து மாற்றங்களை உருவாக்குகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன்
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், தமிழகத்தின் அனைத்து துறைகளும் இந்தியாவிற்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. விஞ்ஞான அறிவை வளர்க்கும் வகையில் தலா ரூ.20 லட்சம் மதிப்பில் அடுத்த மாதம் இறுதிக்குள் 60 பள்ளிகளில் லேப் அமைக்கும் பணிகள் துவங்கப்படும் என்று தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் வந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர் என்ன முடிவு எடுப்பார் என மாலை தான் தெரியும். முதலமைச்சர் எடுக்கும் முடிவு நல்ல முடிவாக இருக்கும் என்றும் கூறினார்.முதல்வரும் , துணை முதல்வரும் இணைத்து புதிய புதிய மாற்றங்களை உருவாக்குவார்கள் என்று அமைச்சர் கூறினார்.