” OPS ,EPS தனி டிவி சேனல் ” நாங்களா ஜெயா டிவி யானு பாத்துருவோம்..!!

Published by
Dinasuvadu desk

சென்னை:

அதிமுக கட்சியின் மிகப்பெரிய அரசியல் கருவியாக ஜெயலலிதா பயன்படுத்தி வந்தது ஜெயா டிவி சேனல்.தற்போது TTV ஜெயா டிவியின் நெட்வொர்க்கை என முழுவதையும் தன்வசப்படுத்தி வைத்துள்ளார்.தற்போது ஆளும் அதிமுக அரசுக்கென்று தனி சேனல் இல்லாமல் இருந்தது. OPS , EPS இணைந்த பிறகு தனி TV சேனல் தொடங்குவது குறித்து பேசப்பட்டது.அதன் முயற்சி தற்போது வெற்றி கிடைத்துள்ளது.தற்போது அவர்களுக்கு ஒரு புது சேனல் தயாராகிவிட்டது.

Image result for ஜெயா டிவி

முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ஒரு புது சேனலை ஆரம்பிக்க போகிறார்கள்.புதிய TV சேனல்  ஆரம்பிக்க அடிப்படை காரணம் ஜெயா டிவி இவர்களின் கையை விட்டு போனதுதான். ஜெயலலிதா இருந்தவரை எல்லோருமே இந்த சேனலைதான் தங்கள் கட்சிக்கு பலமாக, உரமாக பயன்படுத்தினார்கள். ஆனால் அவர் மறைந்தபிறகு நடைபெற்ற பல்வேறு சூழல் காரணமாக டிடிவி தினகரனின் வசம் ஜெயா டிவி முழுவதுமாக போய்விட்டது.இதனால் அதிமுக என்ற பலம் வாய்ந்த கட்சிக்கு என்று தனியாக சேனல் இல்லை. அதுமட்டுமல்லாமல் தற்போது அனைத்து கட்சியை சேர்ந்தவர்களுமே தங்களுக்கென்றும், தங்கள் கட்சியின் செய்தி, கொள்கைகளை பரப்புவதற்கும் தனியாகவே டிவி ஆரம்பித்து செயல்பட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, தமிழகத்தின் பிரதான கட்சியான, அதிலும் ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஒரு டிவி இல்லாதது ஒரு பெரிய குறைதான்.

ஈபிஎஸ் – ஓபிஎஸ் தற்போது அதற்கான இந்த முயற்சியில் ஈடுபட்டு புதிதாக ஒரு சேனலை ஆரம்பித்துள்ளார்கள். இது ஒரு நியூஸ் சேனல் என்று கூறப்படுகிறது. இந்த சேனலுக்கான அனைத்து வேலைகளும் தயாராக நடைபெற்று முடிந்துள்ளன.         இந்த சேனல் ஆரம்பிக்க முழு காரணம்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்தான்.இந்த நியூஸ் சேனலுக்கு பெயர் கூட வைத்துவிட்டார்கள். ஜெயலலிதா பெயரிலேயே “நியூஸ் ஜெ” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புதிய டி.வி. சோதனை ஓட்டம் வருகிற 12-ந்தேதி முதல் தொடங்குகிறது. இதனை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அன்று மாலை 6 மணிக்கு இந்த சேனலை இணைந்து தொடங்கி வைக்கிறார்கள்.

டி.வி.யின் லோகோ, மொபைல் ஆப் போன்றவையும்  அன்று தொடங்கப்படுகிறது.ஜெயா டிவியை மிஞ்சுமா இந்த ‘ J ‘ TV .அநேகமாக இம்மாத இறுதியில் இந்த புதிய சேனல் ஒளிபரப்பப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அப்படி இந்த மாத இறுதியில் இந்த சேனல் வந்துவிட்டால், கண்டிப்பாக நடைபெற உள்ள 2 முக்கிய இடைத்தேர்தல்களுக்கு மிகவும் தூணாக இருக்கும். அதிமுக அரசுக்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த நியூஸ் ஜெ… இருக்குமா? அல்லது ஜெயா டிவியை மிஞ்சி தன் பலத்தையும், திறனையும் நியூஸ் ஜெ… காட்டுமா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

DINASUVADU 

Recent Posts

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

19 minutes ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

19 minutes ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

1 hour ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

3 hours ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

13 hours ago