இபிஎஸ்-க்கு போட்டியாக களமிறங்கிய ஓபிஎஸ்.! தனியார் ஹோட்டலில் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்.!
தமிழக சட்டப்பேரவை குறித்து இபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது போல, ஓபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை கூட்டத்தை நேற்று தனியார் ஹோட்டலில் நடத்தியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அண்மையில் அறிவித்தார். இதனை தொடர்ந்து அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவை நடைபெறுவதை அடுத்து, அதிமுக இடைக்கால பொதுசெயலாளர், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், நேற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது உட்கட்சி பிரச்னையை சட்டப்பேரவைக்குள் எழுப்பக்கூடாது எனவும், தொகுதி பிரச்னையை மட்டுமே பேசவேண்டும் என தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு இபிஎஸ் உத்தரவு போட்டுளளதாக தகவல்கள் வெளியானது.
தற்போது அதே போல , ஓபிஎஸ் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் சென்னை ஆர்.கே சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் சட்டப்பேரவை குறித்த ஆலோசனை கூட்டத்தை நேற்று நடத்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.