தேனியில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓ. பன்னீர் செல்வம் முகாமிட்டுள்ளார். இதைதொடர்ந்து, பண்ணை வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பில் வருகின்ற தேர்தலில் யார் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை அதிமுக நடைபெற்றது .
செயற்குழுக் கூட்டம் முடிந்த பின்னர் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வருகின்ற 7-ஆம் தேதி அறிவிக்கப்படும் என அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு பிறகு, 3 நாள் கழித்து நேற்று தான் முதல்வர் , துணை முதல்வர் இருவரும் சந்தித்தனர். நேற்று மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள காந்தி சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், காமராஜர் நினைவு தினம் என்பதால் கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினர்.இந்த சந்திப்பின் போது, வணக்கம் சொல்லி கொண்டனர். ஆனால், பேசிக் கொள்ளவில்லை. இதையடுத்து, ஓபிஎஸ் சாலை மார்க்கமாக தனது காரில் தேனிக்கு புறப்பட்டார். வழியில் எங்குமே ஓ.பி.எஸ்.க்கு வரவேற்பு தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த வாரம் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளாமல் தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…