ஓபிஎஸ்-ன் கறுப்பு பணம் வெளியே வரவுள்ளது – ஜெயக்குமார்
ஓபிஎஸ்ஸிடம் உள்ள கருப்புப் பணம் இப்பொழுது வெளியில் வருகிறது என ஜெயக்குமார் பேட்டி.
அதிமுகவின் வடசென்னை தெற்கு மாவட்டத்தின் சார்பில் கட்சியில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கும், உறுப்பினர் அட்டையை புதுப்பிப்பதற்கும் உண்டான விண்ணப்பப் படிவங்கள் அதிமுக வட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தான் உள்ளனர். அப்படியிருக்கையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை எங்களிடம் தான் கொடுக்க வேண்டும். ஓபிஎஸ் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக நீடிப்பதற்கு எந்த முகாந்திரம் உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், திருச்சியில் ஓபிஎஸ் 24-ஆம் தேதி மாநாடு நடத்துகிறார். 2 லட்சம் பேரை கூப்பிட வேண்டுமானால் 200 கோடி ரூபாய் செலவு செய்தால் கூட்டிவிடலாம். அவர் பணத்தை கொடுத்து ஆட்களை கூட்டி பெருமையாக சொல்லலாம். எனக்கு ஒரு வகையில் சந்தோசம் என்னவென்றால் ஓபிஎஸ்ஸிடம் உள்ள கருப்புப் பணம் இப்பொழுது வெளியில் வருகிறது. அதுவரை சந்தோசம் என தெரிவித்துள்ளார்.