#Breaking : உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!
ஜூலை 11 நடைபெற்ற அதிமுக பொதுகுழு செல்லும் என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது .
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. அதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற ஒற்றை நீதிபதி அமர்வு ஜூலை 11 பொதுக்குழு செல்லாது என தீர்ப்பளித்து இருந்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது இபிஎஸ் தரப்பு. பின்னர் விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கினர்.
தற்போது இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். கழக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் தான் பொதுக்குழு நடந்த வேண்டும். ஆனால் ஜூலை 11 பொதுக்குழு அப்படி நடைபெறவில்லை எனவும், அதிமுக சட்ட விதிமுறைகள் பின்பற்றப்பட வில்லை எனவும்,
அதனால், ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தடை செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியேட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த இரு வழக்கையும் ஒரே வழக்காக விசாரிக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.