ஓபிஎஸ் மேல்முறையீடு – இறுதி விசாரணை தொடக்கம்.!
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு தீர்மானம் குறித்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு விசாரணை தொடங்கியது.
அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதை அடுத்து, அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்தும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கில் தனி நீதிபதி அமர்வு மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.
இதற்கு எதிராக ஓபிஎஸ் அணியினர் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். முன்னதாக, ஓபிஎஸ் அணியின் மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் கொண்ட இரட்டை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது. அதிமுகவில் தற்போது எடுக்கப்படும் முடிவுகள் அனைத்துமே இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என கூறி அவ்வழக்கு விசாரணையை ஏப்ரல் 20-ம் தேதியான இன்று நடைபெறும் என ஒத்திவைத்திருந்தனர்.
அதன்படி, தற்போது அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் மேல்முறையீட்டு வழக்கில் இறுதி விசாரணை தொடங்கியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வாதங்களை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.