சென்னை:நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு,நாளை முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்படுவதாக ஓபிஎஸ்,இபிஎஸ் அறிவித்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு,அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட அனுமதி கோரும் அதிமுகவினர் நாளை முதல் விருப்ப மனுக்களைப் பெறலாம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
மேலும்,இது தொடர்பாக அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர், நகர மன்ற வார்டு உறுப்பினர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள், வருகின்ற 26.11.2021 முதல் 28.11.2021 வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.
இதில், சென்னை மாநகராட்சி மாமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகள் மட்டும், தங்களுக்கான விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களை, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் சென்னையைச் சேர்ந்த மாவட்டக் கழகங்களின் மூலம் தலைமைக் கழகத்தில் பெற்று, பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.அதன்படி,
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி ஏற்கெனவே விருப்ப மனு அளித்துள்ள கழக உடன்பிறப்புகள், அதற்கான கட்டண அசல் ரசீதினை வைத்திருப்பவர்கள் மட்டுமே, அதனை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழக அலுவலகங்களில் சமர்ப்பித்து, கட்டணம் ஏதுமின்றி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் விருப்ப மனு பெறுவது சம்பந்தமான விபரங்களை, கழக உடன்பிறப்புகள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். அதே போல்,கொரோனா தடுப்புநடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விருப்ப மனுக்களைப் பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்”,என்று தெரிவித்துள்ளனர்.
நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…
சென்னை : ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…