எதிரிகளின் கனவு பலிக்காது., தேர்தலுக்காக மட்டுமே பாஜகவுடன் கூட்டணி – முதல்வர் பழனிசாமி

Default Image

பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் சரி, அதிமுக கூட்டணி வைத்தால் தவறு என சொல்வதா என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில வாரங்களில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என மும்மரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்தவ கையில்அதிமுக பொறுத்தவரை தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வாழப்பாடியில் இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அங்கு ஏற்காடு தொகுதி வேட்பாளர் சித்ராவை ஆதரித்து மாலை 5 மணியளவில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார் என கூறப்பட்டது. இந்த நிலையில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, பல துறைகளை சேர்ந்தவர்களும் பயனடையும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது என தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு மீண்டும் வந்தால் போக்குவரத்துக்கு நெரிசல் இல்லாத நகரமாக சென்னையை மாற்றுவோம் என்றும் அதிக நீர்ப்பாசனம், குடிநீர் திட்டங்களை நிறைவேற்றுவோம் எனவும் கூறியுள்ளார். அதிமுகவை அழிக்க நினைக்கும் எதிரிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது. அதிமுகவின் நான் பயணித்த காலம் கடினமான காலம் என்று பிரபல தனியார் தொலைக்காட்சியில் பேட்டியளித்துள்ளார்.

மேலும், அதிமுகவை வைத்து தமிழகத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க நினைப்பதாக கூறுவது முற்றிலும் தவறு. பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தால் சரி, அதிமுக கூட்டணி வைத்தால் தவறு என சொல்வதா என கேள்வி எழுப்பி, தேர்தலுக்காக மட்டுமே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது, சித்தாந்த அடிப்படையில் அல்ல என கூறியதாக கூறப்படுகிறது. மத்தியில் உள்ள கட்சியுடன் கூட்டணி வைத்தால் தான் மாநிலத்தில் பல திட்டங்களை கொண்டு வர முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்