ஆளும் அரசை எதிர்க்கட்சியினர் பாராட்ட மாட்டார்கள் – அமைச்சர் துரைமுருகன்
ஈரோடு இடைத்தேர்தலில், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இந்த தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், வாக்கு சேகரிக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த இடைத்தேர்தலில், அதிமுக, காங்கிரஸ், தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே 4முனை போட்டி நிலவுகிறது.
துரை முருகன் பேட்டி
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன் அவர்கள், ஈரோடு இடைத்தேர்தலில், திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஆளும் அரசை எதிர்கட்சியினர் ஒரு போதும் பாராட்ட மாட்டார்கள். எதிர்காலத்தை அதிமுகவினர் தான் நிர்ணயம் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.