எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் – ஓபிஎஸ் இருக்கையில் மாற்றமில்லை!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கிய சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், பழனியம்மாள், ஆண்டமுத்து, மறைந்த முக்கிய பிரமுகர்கள் பிரகாஷ் சிங் பாதல், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் அறிவியலாளர் எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தற்போது சட்டப்பேரவை கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இதனிடையே, சட்டப்பேரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய பேரவை தலைவரிடம் வலியுறுத்துவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
இதன்பின்,அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, கவன ஈர்ப்பு தீர்மானங்கள் அளித்தது மட்டுமல்லாமல், எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாகவும் வலியுறுத்தியுள்ளனர். அதாவது, எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்பி உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் சபாநாயகரை சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்திருக்கிறார். ஆர்பி உதயகுமார் உறுப்பினர்கள் இருக்கையில் அமர்ந்துள்ளார் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
AUSvENG : முடிஞ்சா தொட்டுப்பார்.! வெளுத்து வாங்கிய பென் டக்கெட்! ஆஸி.க்கு இமாலய இலக்கு!
February 22, 2025
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025