டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு ! உயர்நீதிமன்றத்தில் வழக்கு
டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதிலும் தலைநகர் சென்னை தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கு இடையில் தான் தமிழக அரசு நேற்று ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் வரும் 7ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது.அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் வரும் 7 -ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.மேலும் அவரது வழக்கில் கொரோனா இல்லாத நிலை உருவான பின்னர் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்.டாஸ்மாக் திறக்கப்பட்டால் மற்ற மாநிலங்களை போல இங்கும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.