தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்பு சின்னம் அணிய வேண்டும் என்று திமுக தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி இருக்கிறது. அதிலும் தலைநகர் சென்னை தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது .கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்கு இடையில் தான் தமிழக அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. அதாவது கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் நாளை முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்தது.ஆனால் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் நாளை டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டது.அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும் தமிழக அரசை கண்டித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சி தலைவர்கள் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,மதுக்கடைகளை திறக்க ஆர்வம் காட்டும் அதிமுக அரசை கண்டித்து கருப்புச் சின்னம் அணிய வேண்டும்.கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு அலட்சியம் காட்டுகிறது. நாளை காலை 10 மணிக்கு கருப்பு சின்னம் அணிந்து 5 பேர் வீட்டு வாசலில் 15-நிமிடம் எதிர்ப்பினை பதிவு செய்யவேண்டும்.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…