மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு ! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு

மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக அரசு மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது.மேலும் நகர்மன்ற, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கும் மறைமுக தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில் மறைமுக தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் முகமது ரஸ்வி வழக்கு தொடர்ந்துள்ளார்.அவரது வழக்கில்,மறைமுகத் தேர்தல் சட்டத்தில் உள்நோக்கம் உள்ளது.இந்த அவரச சட்டம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025