குடியுரிமை சட்ட திருத்த மசோதா முதலில் நாடாளுமன்றத்தின் அவைகளில் ஒன்றான மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.இந்த மசோதாவிற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால் வாக்கெடுப்பின் போது மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்த நிலையில் மசோதா மக்களவையில் நிறைவேறியது.பின்னர் மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது.ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு வடமாநிலங்களில் ஒன்றான அசாமில் கடுமையாக கிளம்பியது.அங்கு பல்வேறு போராட்டங்கள் வெடித்தது.பாதுகாப்புக்காக அங்கு துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் விரோத #CAB2019 வெற்றி பெறுவதற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவளித்தது முக்கிய காரணமாகிவிட்டது. பாஜக அரசின் சிறுபான்மையினர் – தமிழர் விரோத செயல்களுக்கு ஆதரவளிக்கும் தமிழின விரோத அதிமுக அரசைக் கண்டித்து, இன்று (17-12-2019) மாவட்டந்தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் .
நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு…
சென்னை : திமுகவினர் பல்வேறு இடங்களில் மத்திய அரசு இந்தி மொழியை திணிப்பதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக…
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…