குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு – திமுக ஆர்ப்பாட்டம்

Default Image
  • குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலிலும் நிறைவேற்றப்பட்டது. 
  • குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து மாவட்டந்தோறும்  இன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. 

 குடியுரிமை சட்ட திருத்த மசோதா முதலில் நாடாளுமன்றத்தின் அவைகளில் ஒன்றான மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.இந்த மசோதாவிற்கு மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஆனால் வாக்கெடுப்பின் போது மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்த நிலையில் மசோதா மக்களவையில் நிறைவேறியது.பின்னர் மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியது.ஆனால் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு வடமாநிலங்களில் ஒன்றான அசாமில் கடுமையாக கிளம்பியது.அங்கு பல்வேறு போராட்டங்கள் வெடித்தது.பாதுகாப்புக்காக அங்கு துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர் விரோத #CAB2019 வெற்றி பெறுவதற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவளித்தது முக்கிய காரணமாகிவிட்டது. பாஜக அரசின் சிறுபான்மையினர் – தமிழர் விரோத செயல்களுக்கு ஆதரவளிக்கும் தமிழின விரோத அதிமுக அரசைக் கண்டித்து, இன்று (17-12-2019) மாவட்டந்தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்