குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு – நாளை பேரணி

- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- குடியுரிமை திருத்தச்சட்ட எதிராக நாளை பேரணி நடைபெறுகிறது.
மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல் படுத்தியது.இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. .இந்த சட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது .இதன் பின்பு ஸ்டாலின் கூறுகையில் ,குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டிசம்பர் 23ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி நடைபெறும் என்று தெரிவித்தார்.
இதனால் அரசியல் கட்சிகள், விவசாயிகள், வணிகர், மாணவர்கள், திரைத்துறையினர், தொழிற்சங்கங்கள் பொதுமக்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் சென்னையில் 23ஆம் தேதி நடைபெறும் பேரணியில் பங்கேற்க வேண்டும் என்று பல்வேறு சங்கங்கள், அமைப்புகளுக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.இதனையடுத்து நாளை திமுக சார்பாக பேரணி நடைபெறுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025