அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் துணைவேந்தர்கள் ஆளுநரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தல்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு, பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அதில் அண்ணா பெயரை மாற்றினால் பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்துவிடும். முன்னணி நிறுவனங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கேள்வி குறியாகும்.
இதையடுத்து மாணவர்களின் சான்றிதழ் செல்லாமல் போவதுடன் ஐ.ஒ.இ. அந்தஸ்தும் கைநழுவிச்செல்லும். எம்ஜிஆரால் துவங்கப்பட்ட தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பழம்பெருமை வாய்ந்தது. இது பல்வேறு சிறப்புகளை கொண்டது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். பெயரை மாற்றக்கூடாது என அரசுக்கு வலியுறுத்தி மசோதாவில் திருத்தும் செய்ய உத்தரவிட வேண்டும்.
இதனிடையே, அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசியர்கள் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. காணொலி காட்சி மூலம் நடந்த செயற்குழு கூட்டத்தில் வழக்கு தொடர்வது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. சட்டபேரவை கூட்டத்தொடரில் பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…