கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தங்களுக்கு உரிய தொகுதி ஒதுக்காததால் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று வேறு கட்சியுடன் கூட்டணி அமைத்து வருகின்றன.
இதற்கிடையில், நேற்று அதிமுக 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, பாமக போட்டியிடம் தொகுதிகளையும் அதிமுக வெளியிட்டது.இந்நிலையில், நேற்று பாஜக, பாமக போட்டியிடம் தொகுதி வெளியானதும் சில அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏனென்றால் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில தொகுதியை அதிமுக நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுக நிர்வாகிகள் எதிர்பார்த்த தொகுதியை தங்களுக்கு ஒதுக்காமல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்தனர்.
இந்நிலையில், ஆலங்குடி, பல்லடம் , கே.வி குப்பம், விருத்தாசலம் மற்றும் பூந்தமல்லி ஆகிய இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கியதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போரட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கக்கூடாது என கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…