ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை எதிர்கட்சிகள் வைக்கிறார்கள்-நயினார் நாகேந்திரன்.!
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் ஜோதிஸ்ரீதுர்கா, ஆதித்யா மற்றும் மோதிலால் ஆகியோர் நேற்று அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியது.
தமிழகத்தில் நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாகவும், இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக மாணவர்கள் நீட் தேர்வால்தான் இறக்கிறார்கள் என்ற ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டை எதிர்கட்சிகள் வைக்கிறார்கள் என பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.