எதிர்கட்சிகள் தமிழக அரசு மீது திட்டமிட்டு குற்றம்சாட்டி வருகின்றன – முதலமைச்சர் பழனிசாமி
எதிர்கட்சிகள் தமிழக அரசு மீது திட்டமிட்டு குற்றம்சாட்டி வருகின்றதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம் என்று அண்மையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.ஏழை, எளிய மக்களுக்காக தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 அம்மா மினி கிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆகவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக புதிதாக டாக்டர்களும் தேர்வு செய்யப்பட்டு, நியமிக்கப்பட்டு உள்ளனர்.இந்த திட்டத்தை முதற்கட்டமாக தொடங்கி வைத்த நிலையில்,இன்று சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலத்துவாடி கிராமத்தில், அம்மா மினி கிளினிக்கை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதன் பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,தமிழகம் தான் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதத்தை குறைத்த மாநிலம் ஆகும்.டெல்லி ,கேரளா மாநிலங்களை குறிப்பிட்டு காட்டியவர்கள் இப்போது எங்கே போனார்கள்? என்று கேள்வி எழுப்பினர்.மேலும் எதிர்கட்சிகள் தமிழக அரசு மீது திட்டமிட்டு குற்றம்சாட்டி வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.