எதிர்க்கட்சிகள் ஆதாரமின்றி  விமர்சனம் செய்து வருகின்றனர் -முதல்வர் பழனிசாமி

Default Image

எதிர்க்கட்சிகள் ஆதாரமின்றி  விமர்சனம் செய்து வருகின்றனர்என்று  முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று சென்றார்.அங்கு அவர் பேசுகையில்,  சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளது.மக்கள் அதிகம் வந்து செல்லும் மாவட்டங்களாக இருப்பதால் காஞ்சிபுரம்,செங்கல்பட்டில் நோய் பரவல் அதிகம் உள்ளது.வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் அதிகம் வருகின்றனர்.

மருத்துவமனைகளில் போதுமான படுக்கை வசதிகள் உள்ளது. காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது .அறிகுறி உள்ளவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது.அரசின் நடவடிக்கையால்தான் நோய் பாதிப்பு குறைந்துவருகிறது .அரசியல் ஆதாயத்திற்காக சிலர் வேண்டுமென்றே குற்றம்சாட்டுகின்றனர் .மருந்தே இல்லாதபோதும், சுமார் 88 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனா கட்டுக்குள்வந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். எதிர்க்கட்சிகள் ஆதாரமின்றி விமர்சிக்கின்றனர். ஆனால் மருத்துவர்கள்,செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்