நாராயணசாமி தலைமையிலான காங்கிரசுக்கு இன்னும் மூன்று மாதம் பதவி காலம் உள்ளது. அதற்குள் அமைச்சர் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ், ஜான்குமார் ஆகிய நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்தது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பலம் 10-ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் திமுக 3 , ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆதரவுடன் ஆளும் காங்கிரசின் பலம் 14-ஆக உள்ளது. எதிர்க்கட்சிகள் என்ஆர் காங்கிரஸ்-7, அதிமுக -4, நியமனம் எம்எல்ஏக்கள் மூன்று என மொத்தம் 14-ஆக உள்ளது.
இதனால், காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இழந்துள்ளது என எதிர்க்கட்சிகள் கூறிவந்த நிலையில், இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி செய்தியாளரிடம், கூறும்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறது எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர் என தெரிவித்தார்.
இந்நிலையில், புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை எனவும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க கோரி துணை நிலை ஆளுநரின் செயலாளரிடம் எதிர்க்கட்சியினர் மனு கொடுத்துள்ளனர்.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் என்பவர்…
சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…
சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…
சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…
சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…