அதிமுக எம்.எல்.ஏக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ஆலோசனை!

Default Image

இன்னும் சற்று நேரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் எதிர்கட்சித் தலைவர் ஆலோசனை.

2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்னும் சற்று நேரத்தில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி வருகை புரிந்தார்.

இந்த சமயத்தில், அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் எதிர்கட்சித்தலைவர் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.  சட்டபேரவையில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்தும், சட்டப்பேரவையில் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்தும் கட்சி எம்எல்ஏக்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்குவதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்