சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் பேச ஓபிஎஸ் யார்.? – இபிஎஸ் ஆவேச பேச்சு.!

Default Image

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதற்கு, எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. முதலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்த்தும் அதன் மீதான விவாதம் நடைபெற்றது.

அதிமுக ஆதரவு : 

அப்போது, அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம் பேசுகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். ஆன்லைன் ரம்மி தேவையற்றது.எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஓபன்னீர்செல்வம் பேச அனுமதி அளிக்கப்பட்டது.

ஓபிஎஸ் ஆதரவு :

ஓபிஎஸ் பேசுகையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு அதிமுக சார்பில் முழு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இதற்கு இபிஎஸ் தரப்பினர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இபிஎஸ் எதிர்ப்பு :

இதனை தொடர்ந்து , எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ஒவ்வொரு கட்சி சார்பிலும் ஒவ்வொரு நபர் பேச வேண்டும் என்றே முதலில் கூறினீர்கள். எங்கள் அதிமுக சார்பில் ஏற்கனவே ஒருவர் பேசிவிட்டார். அடுத்ததாக அதிமுக சார்பில் என இவரை (ஓபிஎஸ்) எதற்காக பேச அனுமதித்தீர்கள்? என ஆவேசமாக பேசினார்.

ஓபிஎஸ் யார்.? :

மேலும், இவர் (ஓபிஎஸ்) அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. பேச அனுமதி கொடுத்ததன் மூலம் தன்னை அதிமுக கட்சிக்காரர் என காட்டி கொள்கிறார். என குற்றம் சாட்டினார்.

சபாநாயகர் விளக்கம் :

இதற்கு சபாநாயகர் அப்பாவு பதில் கூறுகையில், ஓ.பன்னீர் செல்வதை பொதுவாக உறுப்பினர் பேசுகிறார் என்றே குறிப்பிட்டகாகவும், ஓபிஎஸ் முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் அவரை பேச அனுமதித்ததாகவும் குறிப்பிட்டார்.

அதிமுக  அமளி :

சபாநாயகரின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த அதிமுகவினர் , எங்கள் கட்சி சார்பில் எதிர்க்கட்சி தலைவர் , துணை தலைவர் என பொதுக்குழுவில் முடிவு செய்து வைத்துள்ளோம். நீங்கள் (திமுக அரசு) வேண்டும் என்றே எங்களுக்குள் பிரச்சனை ஏற்படுத்த இவ்வாறு செய்கிறீர்கள் என கூறி அதிமுகவினர் சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்