கள்ளக்குறிச்சி, போதைப்பொருள், டாஸ்மாக் என அடுக்கடுக்கான குற்றசாட்டுகள்.! ஆளுநரிடம் இபிஎஸ் கொடுத்த புகார் லிஸ்ட்….

Default Image

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு நிலை குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புகார் மனு அளித்திருந்தார்.   

இன்று சென்னை கிண்டியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். தமிழக சட்டஒழுங்கு பற்றியும். ஆளும் அரசு மீதான புகாரையும் அந்த சந்திப்பின் போது எடுத்துரைத்ததாக இபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ கோவையில் சிலிண்டர் வெடித்தது மக்கள் கூடும் இடத்தில் வெடித்தால் இந்நேரம் பல உயிர்கள் பலியாகி இருந்திருக்கும். இதனை முன்கூட்டியே கவனித்து தடுத்த நிறுத்த உளவு துறை தவறிவிட்டது. என குற்றம் சாட்டினார்.

அடுத்து, கனியமூர் சம்பவம். கடந்த ஜூலை மாதம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனியமூரில் 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதன் பின்னர் அந்த மாணவியின் பெற்றோர் முறையாக மாவட்ட நிர்வாகதிற்கும், காவல்துறைக்கும் புகார் அளித்து இருந்தனர். ஆனால் தாமதமான நடவடிக்கையின் காரணாமாக தான் இவ்வளவு பெரிய கலவரம் நடந்துள்ளது. உளவுத்துறை சரியாக செயல்பட்டு முன்னெச்சரிக்கை செய்து இருந்தால் கலவரம் நடந்திருக்காது. பள்ளி தீக்கிரையாக்கப்பட்டு இருக்காது.

அடுத்து, மாணவர்களிடம் போதைப்பொருள் என்பது சர்வசாதாரணமாக கிடைக்கிறது. அது ஆளும் கட்சியின் நிர்வாக திறமையின்மை காணமாக எல்லா எல்லை பக்கங்களிலும் இருந்து வந்து கொண்டு இருக்கிறது. போதை பொருளை கட்டுப்படுத்த முடியாத சூழலில் தான் அரசு இருக்கிறது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் தங்குதடையில்லாமல் கிடைக்கபெற்று வருகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என இபிஎஸ் தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில், தமிழகத்தில் எல்லா துறைகளிலும் லஞ்சம் சர்வசாதாரணமாகி விட்டது. திமுக கொள்கையே கமிஷன் – கலெக்சன் – கரப்ஷன். அதுதான் செயல்பட்டு கொண்டிருக்கிறது.  தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இருப்பதை அமைச்சரே ஒத்துக்கொண்டார். அதிமுக ஆட்சியில் தங்கு தடையில்லாமல் மருந்து கிடைத்தது. ஆண்டி பயாடிக் மருந்து இல்லை, நாய்கடிக்கு மருந்து இல்லை என அதிகாரிகளை மாற்றுகிறார்கள் தமிழக அரசு. அது அரசின் வேலை அதிகாரிகள் இதில் என்ன செய்வார்கள். அதிமுக ஆட்சியில் குறைவான விலையில் தரமான மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இப்போது அவங்க இஷ்டத்திற்கு விலை வைத்து மருந்து கொள்முதல் செய்கிறார்கள். காலாவதி மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இருப்பதை உயர்நீதிமன்றமே எச்சரிகை கொடுத்துள்ளது .

உள்ளாட்சி முன்னேற்றத்திற்கு மத்திய அரசு நேரடியாக நிதி வழங்குகிறது. இதில் செலவு போக மீதி பணத்தை மீட்டு சென்னைக்கு அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. இது உள்ளாட்சி அதிகாரத்தை பறிக்கும் செயலாகும். உள்ளாட்சி விளம்பர பேனர் விலை 350 ரூபாய் தான் ஆகும். அனால் தமிழக அரசு 7,906 ரூபாய் என பில் போட்டுள்ளனர்.

டாஸ்மாக் பாரில் 24 மணிநேரமும் மதுபானம் விற்கிறார். டெண்டர் விடாமல் பார் நடத்துகிறார்கள். கலால் வரி செலுத்தாமல் மது விற்கிறார்கள். இதெல்லாம் குறித்து தான் ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்