பிரதமர் நரேந்திர மோடிக்கு மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்….!

Published by
லீனா

பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், சில கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா முழுவதும்  கொரோனா வைரசின் இரண்டாவது  அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு ஒரு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தற்போது 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள், சில கோரிக்கைகளை முன்வைத்து கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழகத்தில், தினசரி 32,000-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை செயல்படுத்தி வந்தாலும், நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகளை, ஐசியு படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் தமிழகம் முழுவதும் மருத்துவமனை வாயிலில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு உடனடியாக கீழே கூறப்பட்டுள்ள விஷயங்களை செய்து கொடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

  1. தமிழகத்திற்கான ஆக்சிஜன் யோகத்தை அதிகப்படுத்த வேண்டும்.
  2. ரெம்டேசிவிர் விநியோகத்தை அதிகப்படுத்த வேண்டும் .
  3. தமிழகத்திற்கான தடுப்பூசிகள் ஒதுக்கீட்டையும் அதிகரிக்கப்படுத்த வேண்டும்.

என கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

31 minutes ago

இன்று தொடங்குகிறது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர்.!

புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில்  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…

51 minutes ago

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

1 hour ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

9 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

12 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

14 hours ago