தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து..!

தமிழ்நாட்டின் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் மாற்றம் செய்யப்பட்டது. அதில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது இணை அமைச்சராக பொறுப்பேற்றார். இதன் பின்னர், பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை நியமித்தார்.
இவர் இதற்கு முன்னர் தமிழகத்தில் பாஜக துணைத்தலைவர் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பலரும் அண்ணாமலைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘தமிழ்நாடு பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சகோதரர் திரு. அண்ணாமலை அவர்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சகோதரர்
திரு @annamalai_k அவர்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். @BJP4TamilNadu— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 8, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!
March 4, 2025
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025