#BREAKING: பெரியார் சிலைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மரியாதை..!

அதிமுக சார்பில் சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே பெரியார் சிலைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பெண் விடுதலைக்காகவும், சமூக நீதிக்காகவும் பாடுபட்ட தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இன்று பெரியாரின் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிலையில், அதிமுக சார்பில் சென்னை ஜெமினி மேம்பாலம் அருகே பெரியார் சிலைக்கு முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பெரியார் பிறந்தநாளை இந்த ஆண்டு முதல் அரசு அலுவலகங்களில சமூக நீதி நாளாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.