எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி இரங்கல்…!

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி இரங்கல்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இடைச்செவல் கிராமத்தில் 1922-ம் ஆண்டு பிறந்தவர் கி.ராஜநாராயணன். 7-ம் வகுப்பு வரை படித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்த கி.ராஜநாராயணன், பின்னர் எழுத்தாளராக மாறினார். கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படுபவர் எழுத்தாளர் கி.ராஜநாராயணன்.
இவர் புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசுக் குடியிருப்பில் வசித்து வந்த இவர், வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், கமலஹாசன், டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்,அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் கி.ரா என்கிற கி.ராஜநாராயணன் (99) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்,அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 18, 2021