பெரியாரை எதிர்ப்பது தமிழ்தேசியம் அல்ல; சனாதனத்தை எதிர்ப்பதுதான் தமிழ்தேசியம் – திருமாவளவன்
தி.க. மற்றும் திமுகவை எதிர்ப்பது என்பது திரிபுவாதம், இது சனாதன சக்திகளுக்கு துணைபோகக் கூடிய ஆபத்தான அரசியல் என திருமாவளவன் பேச்சு.
சென்னையில் அசோக் நகரில், விசிக சார்பில் நடைபெற்ற பிபிசி ஆவணப்பட திரையிடல் நிகழ்வில் விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்துத்துவா கொள்கையையும், சனாதனத்தையும் எதிர்ப்பதுதான் தமிழ்தேசியம்; அதைவிடுத்து தி.க. மற்றும் திமுகவை எதிர்ப்பது என்பது திரிபுவாதம், இது சனாதன சக்திகளுக்கு துணைபோகக் கூடிய ஆபத்தான அரசியல்; பெரியாரை எதிர்ப்பது தமிழ்தேசியம் அல்ல, சனாதனத்தை எதிர்ப்பதுதான் தமிழ்தேசியம்.
‘லவ் ஜிகாத்’ என்பதை நாடக காதல் என மொழிபெயர்த்து, தமிழ்நாட்டில் சிலர் தலித் மக்களுக்கு எதிராக பயன்படுத்தினார்கள், அது சனாதன சக்திகளிடம் இருந்து காப்பி அடித்த அரசியல். லவ் ஜிகாத் என்ற பெயரில் வன்முறை, புனித பசு என்ற பெயரில் வன்முறை, மதமாற்றம் என்ற பெயரால் வன்முறை ஆகியவை சனாதன பயங்கரவாதத்திற்கான அடிப்படை.