#BREAKING: அரியர் தேர்வு கட்டணம் செலுத்த அவகாசம்..?
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தேவதுரை என்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் வழக்கு ஒன்றை தொடந்துள்ளார்.
அதில், பருவ தேர்வில் சில படங்களில் தோல்வி அடைந்ததால் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து இருந்த்தாகவும், கொரோனா ஊரடங்கு காரணமாக மறு மதிப்பீடு முடிவுகள் தாமதமாக வந்ததால், அந்த மறு மதிப்பீட்டிலும் தோல்வி அடைந்தது பின்னர் தான் தெரியவந்தது.
அதற்குள் அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்த இருந்த கால அவகாசம் முடிந்து விட்டது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டபோது, அவகாசம் முடிந்து விட்டது அனுமதிக்க முடியாது என கூறினார்.
மறு மதிப்பீடு முடிவிற்காக காத்திருந்ததால் அரியர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தகொடுத்த அந்த கால அவகாசத்தில் கட்டணம் செலுத்த முடியவில்லை எனவே ஆரியர் தேர்வு எழுத அனுமதி வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கு மேலும் ஒருமுறை கால அவகாசம் வழங்கி, தேர்வெழுத அனுமதிக்கவும், தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்பதை காட்டிலும் இது சிறப்பாக இருக்கும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர்.