#Breaking: சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு- ஓ.பன்னீர்செல்வம்!
சூழ்நிலையை பொறுத்து நடிகர் ரஜினிகாந்தின் கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்புள்ளதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும், அதுதொடர்பான விபரங்கள் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாகும் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இதற்கு பல அரசியல் தலைவர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், துணை முதல்வர் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்தார்.இதுகுறித்து செய்தியாளரை சந்தித்த அவர், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாகவும், அரசியலில் எதுவும் நடக்கலாம் என உரையாற்றிய அவர், வரும் காலத்தில் சூழ்நிலையை பொறுத்து ரஜினியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.