வெளியான கருத்து கணிப்பு!மக்களவை தேர்தலில் இந்த கட்சிக்கு தான் வெற்றி வாய்ப்பு
மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான கருத்துக்கணிப்பை லயோலா கல்லூரி முன்னாள் மாணவா்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் நெருங்கிவருகின்ற நிலையில், தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர்.அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக பிரச்சாரம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க- பா.ம.க.-தே.மு.தி.க- த.மா.கா- புதிய தமிழகம் – புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றது.
அதேபோல் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் – மதிமுக – விசிக – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – இந்திய கம்யூனிஸ்ட் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – ஐஜேகே ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றது.
இந்நிலையில் லயோலா கல்லூரி முன்னாள் மாணவா்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில்,திமுக கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகளில் 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. அதேபோல் அ.தி.மு.க கூட்டணி 3-5 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.தினகரனின் அ.ம.மு.க 2 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.திமுக கூட்டணி 18 சட்டமன்றத் தொகுதிகளில் 9 -11 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.தினகரனின் அ.ம.மு.க 3 – 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.