இரவில் நடந்த ஆப்ரேஷன் – தமிழ்நாடு முழுவதும் 560 ரவுடிகள் அதிரடி கைது!

Default Image

தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றிரவு முதல் 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டு விசாரணை.

தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றதில் இருந்து சைலேந்திரபாபு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை சம்வங்கள் தொடந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் குற்றங்களை தடுக்கும் விதமாக நேற்று இரவோடு இரவாக தமிழ்நாடு போலீசார் முக்கியமான ஆபரேஷனை செய்துள்ளனர்.

டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ரவுடிகளின் அராஜகத்தை ஒலிக்க நேற்று இரவு முதல் இன்று அதிகாலை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி உள்ளனர். அதன்படி, சென்னை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தேனி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது.

தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று நடந்த ஸ்டோரிமிங்க் ஆப்ரேசனில் 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைதானவர்களிடம் இருந்து 256 அரிவாள்கள், கத்தி மற்றும் 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், கைதி செய்யப்பட்ட ரவுடிகளிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் 700 இடங்களில் நடந்த சோதனையில் 70 ரவுடிகள் கைதான நிலையில், கஞ்சா மற்றும் மாவா பொட்டலங்களும் சிக்கியுள்ளன. ராமநாதபுரத்தில் -79, திண்டுக்கல்லில்-44, சிவகங்கை-37, திருவள்ளூரில்-45, பெரம்பலூரில்-6, புதுக்கோட்டையில்-13 கன்னியாக்குமரியில்-39, நெல்லையில்-37, தென்காசியில்-73, திருவாரூரில்-8, தஞ்சையில்-62 உள்ளிட்ட 560 ரவுடிகள் கைதாகியுள்ளனர்.

டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின் பேரில் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக 870 பழைய குற்றவாளிகளை விசாரித்ததில் 450க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கைது செய்யப்பட்ட 450 ரவுடிகளில் 181 பேர் நீதிமன்ற பிடியாணை உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்