திண்டுக்கல் மாவட்டதிற்கு பாசனத்திற்காக வரதமாநதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு – முதல்வர் பழனிசாமி

திண்டுக்கல் மாவட்டதிற்கு பாசனத்திற்காக வரதமாநதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் வரதமாநதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளது.
இந்நிலையில், வேளாண் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, வரதமாநதி அணையிலிருந்து பாசனத்திற்காக 6.11.2020 முதல் 120 நாட்களுக்கு பாட்டன்கால்வாய், பெரிய வாய்க்கால், பழனி வாய்க்கால் மற்றும் 18 பாசன குளங்களின் பாசன வசதிக்காக தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 5523.18 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தேறிவித்துள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் அறிக்கை – 02.11.2020 pic.twitter.com/no0WWI7eln
— DIPR TN (@TNGOVDIPR) November 2, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!
May 22, 2025
LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!
May 22, 2025