வைகை அணை திறப்பு.. 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

சென்னை: வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் 4 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை அணையிலிருந்து இன்று முதல் நான்கு நாட்களுக்கு 19ம் தேதி வரை, சிவகங்கை மாவட்ட பாசன தேவைக்காக மொத்தம் 376 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
அதன்படி, விநாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்படுவதால், தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், வைகை ஆற்றில் யாரும் குளிப்பதற்காக இறங்க வேண்டாம் என பொதுப்பணித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 114 அடியில் இருந்து 115 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அணையில் இருந்து தேனி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டும் 100 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025