சேப்பாக்கத்தில் 8 வருடங்களாக மூடிக்கிடந்த மூன்று கேலரிகள் திறப்பு…

கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ, ஜே, கே என்ற மூன்று கேலரிகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கட்டியது. இந்த மூன்று கேலரிகளிலும் 12 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய அளவிற்கு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த கேலரிகளை கட்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அரசிடம் முறையான அனுமதி பெற வில்லை என்றும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது என கூறி சென்னை மாநகராட்சி 3 கேலரிகளுக்கும் சீல் வைத்தது.
கடந்த எட்டு ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த அந்த மூன்று கேலரிகளை திறக்க அனுமதி கோரி சமீபத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெருநகர வளர்ச்சி குழுமத்தில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஐ, ஜே, கே மூன்று கேலரிகள் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர் ரவிக்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025