திருவள்ளுவர் சிலை – விவேகானந்தார் பாறையை இணைக்கும் கண்ணாடி பாலம் திறப்பு!
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை- விவேகானந்தர் பாறையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிப் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இரண்டு நாள் பயணமாக தூத்துக்குடி வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, அரசு உதவி பெரும் பள்ளிகளில் தமிழ்வழி கல்வி பயின்று உயர்கல்வி படிப்பு பயிலும் மாணவிகளுக்கு புதுமை பெண் விரிவாக்க திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோடு வழியாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, வெள்ளிவிழா மூன்று நாள் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடைபெறுகிறது.
அந்த வெள்ளி விழாவின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அங்கு நடைபெற்று வரும் முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் கலந்து கொள்ள செல்லும் வழியில் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்பொழுது, முதல்வருடன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், நேரு உள்ளிட்டோரும்
இதை தொடர்ந்து, கன்னியாகுமரி அடையாளமாக வள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறைக்கும், அருகேயுள்ள விவேகானந்தர் மண்டபம் அமைந்துள்ள பாறைக்கும் இடையே கண்ணாடிப் பாலத்தை தற்பொழுது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
ரூ.37 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இக்கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தபின், அவ்வழியாக முதல்வர் விவேகானந்தர் பாறைக்குச் சென்றார். நவீனத் தொழில்நுட்பத்தில் கடல் நடுவே அமைந்துள்ள இந்த கண்ணாடிப் பாலம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.
கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே 97 மீட்டர் நீளம், 4 மீட்டர் அகலத்தில் இந்த கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் மீது நடக்கும்போது கடல் அலை களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.