கோடைவிடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு
தமிழகம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.
மேலும் பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள், இதர பொருட்களை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.
ஆனால் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்ற செய்திகள் அதிகமாக உலவி வந்தது.ஆனால் இன்றையை பள்ளி திகைப்பில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துளளது.