ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு -பள்ளிக்கல்வித் துறை அதிகாரபூர்வ அறிவிப்பு.!
சென்னை: கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்தல் முடிவு மற்றும் வெப்பம் அதிகரிப்பு காரணமாக, ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான உடன் ஜூன் 6ஆம் தேதியே பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.
ஆண்டுதோறும், தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து பின், ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகள் திறப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனை கூட்டத்தில், ஜூன் 6-ம் தேதி என முடிவெடுக்கப்பட்டு, பள்ளிக்கல்வித் துறை அதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகின்றது என் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.