பள்ளிகள் திறப்பு : முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும் – அமைச்சர் செங்கோட்டையன்
பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனைவரின் கருத்துக்களை அறிந்து, முதலமைச்சர் அவர்கள் தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுப்பார்.
கடந்த 9 மாதங்களாக கொரோனா என்னும் கொள்ளை நோய் உலகதையே ஆட்டி படைத்தது வருகிற நிலையில், தமிழாக்கம் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இதனை தொடர்ந்து, சமீப காலமாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கால்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டது.
ஆனால், பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத நிலையில், இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகிற நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், ‘பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் அனைவரின் கருத்துக்களை அறிந்து, முதலமைச்சர் அவர்கள் தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுப்பார்.’ என தெரிவித்துள்ளார்.