கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு… முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!
விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் செல்லும் மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து 6-12 ஆம் வகுப்பிற்கான அனைத்து பள்ளிகளும் இன்று திறக்கப்படுகின்றன. முன்னதாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஜூன் 7 ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என வெளியான அறிவிப்பு, பின்னர் ஜூன் 12 ஆம் தேதியான இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்குகின்றன. அனைத்து மாணவ, மாணவிகளும் இன்று பள்ளிக்கு செல்கிற நிலையில், அவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அவர் தனது ட்வீட்டில், மாணவ செல்வங்களே நன்கு படியுங்கள், அதோடு நிற்காமல் விளையாட்டிலும் ஈடுபடுங்கள், மற்றும் உலக அறிவை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி பெற அரசுடன் நானும் துணை நிற்பேன், உங்களுக்கு எனது வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.<
கோடை விடுமுறை முடிந்து இன்று முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள்!
நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும்! நான் உறுதுணையாக…
— M.K.Stalin (@mkstalin) June 12, 2023
/p>