பள்ளிகள் திறப்பு.. 2 தேதிகள்..! விரைவில் வெளியாகும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

anbil mahesh poyyamozhi

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க 2 தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு 6 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ஆம்தேதியும், இதேபோல் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் வெயில் தொடர்ந்து சுட்டெரித்துக் கொண்டு இருக்கிறது. இதனால், பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

இந்த சமயத்தில், தமிழகத்தில் கோடை வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் இன்று அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், ஜப்பானில் இருந்து முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்ன முடிவு எடுத்து உள்ளீர்கள் என கேட்டார். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்பறையில் அமர்வது கடும் சிரமம் என்பதை முதல்வர் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளோம்.

நேற்று மாவட்ட கல்வி அலுவர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தி இருக்கிறோம். திருவண்ணாமலை, வேலூர், கரூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதாக மாவட்ட அலுவலர்கள் கூறியுள்ளனர். பள்ளி திறப்பை தள்ளிவைக்க பெற்றோர் கோரிக்கை வைக்கப்பட்டாலும் வெளியிலின் தாக்கம் உள்ளது என்பது உண்மைதான்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளை திறக்க 2 தேதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பு தேதி குறித்து மிக விரைவில் அறிவிக்கப்படும் என்றார். எனவே, தமிழ்நாட்டில், ஒட்டுமொத்தமாக ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 7-ஆம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கும்போதே பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்