குடிமகன்களுக்கு குஷியான செய்தி.! இன்று முதல் கூடுதலாக 94 கடைகள் திறப்பு

Default Image

இன்று முதல் திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக 94 மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சில தடைகளுக்கு பின்னர் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர் தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  

இதையடுத்து, இன்று முதல் திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக மதுக்கடைகளை திறக்க டாஸ்மாக் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர் மேற்கில் 83 கடைகளும்,  காஞ்சிபுரம் வடக்கில் கூடுதலாக 11 கடைகளையும் நாளை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது.

திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் சாதாரண, நடுத்தர ரக மதுவகைகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. திறக்கப்படாத  டாஸ்மாக் கடைகளில் உள்ள குறைந்த விலை மதுபானங்களை, திறந்துள்ள கடைகளுக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்